BREAKING: டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம்!

 
டிஎன்பிஎஸ்பி முனியநாதன்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்படும் வரையில் சி.முனியநாதன் பொறுப்பு  தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவி வகித்து  வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பல் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்பி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தின் மூலம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதன் தலைவராக பாலச்சந்திரன் ஐஏஎஸ் கடந்த 2020ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 9ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து புதிய  தலைவரை மனிதவள மேம்பாட்டுத்துறை நியமிக்க உள்ளது. அதுவரை சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சி.முனியநாதன் ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு தலைவர் சி.முனியநாதன் சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 2010ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மேலும் நாகை மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். ஆதிதிராவிட நலத்துறை ஆணையர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை சி.முனியநாதன் வகித்து வந்துள்ளார். 

தேர்வு
முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web