#BREAKING: 8,268 ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு!

 
ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிவதற்காக தற்காலிக ஆசிரியர் பணிக்கு இது வரையில் 24 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்காலிக ஆசிரியர் காலி பணியிடங்களில் 13,331 பேருக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கான போட்டித் தேரவு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்ய தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் சமூகநீதித் தீர்ப்பு: முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்! –  டாக்டர் ராமதாஸ்

இதைத்தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 13,391 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு நடைபெறும். இதன்படி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தற்போது அறிவிக்கப்பட்ட 13,331 காலி ஆசிரியர் பணியிடங்களில் 5,063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி  மொத்தம் உள்ள 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதிச் சான்றை ஆயுள்கால சான்றாக மாற்றி அறிவிக்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ்

இதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web