#BREAKING: தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

 
ஸ்டாலின் கூட்டம்

கடந்த 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்ததையடுத்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம்  உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாஸ்க்

மேலும், தமிழகத்தில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் சற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 219 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவதோடு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டயாமாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web