#BREAKING: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 குறைப்பு! டீசல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு!! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

 
பெட்ரோல்

மகாராஷ்டிராவில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் குறைத்து அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார். 

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டது.

இனி மாஸ்க் போடலன்னா பெட்ரோல், டீசல் கிடையாது!

பாஜக ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அந்த விலை குறைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் இருந்து வந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 111-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று (நவம்பர் 19) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே, பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், விலையை குறைத்து அறிவித்துள்ளார். 

அதன்படி, மகாராஷ்டிராவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.5ம் டீசல் விலை ரூ 3-ம் குறைத்தும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web