மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்தே பிறந்த குழந்தை! உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

 
குழந்தை உயிரிழப்பு

 

சென்னை, மீனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவருடைய மனைவி 32 வயதான ஸ்ரேயா பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக இவரை உறவினர்கள்  எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். இந்நிலையில்  நேற்று,உயிரிழந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை

 மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ஸ்ரேயா பானுவுக்கு ரத்தம் அழுத்த பிரச்னை உள்ளது. அவர் கருவுற்றது முதல், தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் தான், அவர் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உடனே 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், குழந்தைக்கு இதயத் துடிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு, பிரசவ வலிக்கான மருந்துகள் அளிக்கப்பட்டு, நேற்று பிரசவம் முடிந்து இறந்த ஆண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, குழந்தை இறந்ததுக்கான மருத்துவச் சான்றுகள் எங்களிடம் உள்ளன என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web