பகீர் !! ரூ200கோடி ஹெராயின் கடத்தல்!! சுற்றி வளைத்த காவல்துறை!!

 
ஹெராயின்

இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருட்கள் கடத்தல் அதிகமாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் வான்வழி, நீர்வழி, நிலவழி என அனைத்து வழிகளிலும் ஏதாவது ஒரு வகையில் போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பது தினசரி வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்த முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைக்க அதிரடி மிஷன் ஒன்று காவல்துறையால் செயல்படுத்தப்பட்டது. 

ஹெராயின்

அதன்படி கேரள கடல் பகுதியில் ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை இந்திய கடற்படை மற்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீசார் இணைந்து அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ஈரானிய கப்பலை மடக்கி பிடித்த போதை மருந்து தடுப்புபிரிவு போலீசார், பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த 2 ஆசாமிகளை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன.

கப்பல்

அதன்படி வெளிநாட்டினர் 2 பேர் வந்த கப்பலை கடற்படையினர் பறிமுதல் செய்து ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயினையும் பறிமுதல் செய்தார்கள். அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கப்பல் கொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் போதை தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடல் மார்க்கமாக ரூ.200 கோடி ஹெராயின் கடத்த முயற்சி செய்த சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web