அருவிகளில் குளிக்க தடை! அதிரடி உத்தரவு! ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்!!

 
ஒகேனக்கல்

தமிழகத்தில் காவிரி ஆற்றின் ஒரு பகுதியாக ஒகேனக்கல் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு  சீசன்களில் மட்டுமல்ல பெரும்பாலும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து ஆட்டம் போடுவர். அத்துடன் நீண்ட  பரிசல் பயணமும்  சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும். 

ஒகேனக்கல்


கடந்த சில வாரங்களாக கர்நாடகம்  மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில்  நீர்வரத்து அதிகரித்து வருகிறதுநீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ்  அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். தற்போது அருவியில் வரும் நீரின் கொள்ளளவு  16000  கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web