சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!! ராட்சத அலைகளால் சீறும் கடல்!!

 
தனுஷ்கோடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் மிக அதிகமாக காணப்படுகிறது.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம்  பகுதிகளில்  மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

இதே போல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்கவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களில் கடலில் இறங்கா வண்ணம் கண்காணிக்கவும் 24 மணி நேரமும் சுழற்சி முறையினர் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web