வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..!! ஜம்முவில் பரபரப்பு!!!

 
கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றன. இருந்த போதிலும் அதிர்ச்சி தரும் பயங்கரவாதச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த வகையில் தற்போது  குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை

குல்காம் மாவட்டத்தில் உள்ள அரேஹ் மோகன்போராவில் உள்ள எல்லாக்கி தேஹாட்டி வங்கியில் உள்ள வங்கி மேலாளர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரில் வசிப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாயன்று, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 36 வயதான காஷ்மீரி பண்டிட் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான ரஜ்னி பாலா பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களில், காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட் ஊழியர் ராகுல் பட் உட்பட இரண்டு பொதுமக்களும், மூன்று போலீசாரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில், பண்டிட் சமூக மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை (ஜூன் 3) உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் குல்தீப் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைவர் பங்கஜ் சிங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை