3 வது நாளாக தடை!!! ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்!!!

 
ஒகேனக்கல்

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடக மற்றும் கேரள மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது

ஒகேனக்கல்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்துசேர்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் ஏற்கனவே 2 நாளாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஒகேனக்கல்

இன்று 3 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள்  பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web