குரங்கு அருவியில் குளிக்க தடை!!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!!

 
குரங்கு அருவி

 


ஆழியார் குரங்கு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்கக் கூடாது என்று வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆழியார் அணை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் அப்பகுதியில் உள்ள குரங்கு அருவி எனப்படும் கவியருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஆனந்த குளியல் போட அதிகளவில் திரளும்.

குரங்கு அருவி

ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது வால்பாறை கவர்கல் மற்றும் சக்தி எஸ்டேட் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பல நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் நீர் வரத்து தொடர்ந்த அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று நாள் முழுவதும் வால்பாறை பகுதியில் பெய்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆழியாறு கவி அருவிக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்.   மேலும் தொடர் மழையால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ள நிலையில், கொண்டை ஊசி மலை சாலைகளில் மண் சரிவு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே அதுபோன்ற சாலைகளில் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தி வைக்க வேண்டாம். மேலும் வாகனங்களில் பயணிகள் இருக்க வேண்டாம்’’ என்று எச்சரித்துள்ளது.

குரங்கு அருவி

விடுமுறையை கழிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள், அங்கு பெய்து வரும் தொடர் மழையால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே தாங்கள் தங்கியிருக்கும் விடுதியை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web