உஷார்! வேகமாக அதிகரிக்குது கொரோனா தொற்று! சென்னையில் அதிகபட்ச பாதிப்பு!

 
கொரோனா தடுப்பு பணிகள்

மக்களே ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க.. பொது இடங்களில் செல்லும் போது மறக்காம மாஸ்க் போட்டுக்கிட்டு போங்க. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கிறது.ஆனாலும், பொதுமக்கள் கூட்டங்களில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் சுற்றித் திரிகின்றனர். தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் அதிரடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கொரோனா

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 2வது நாளாக 2ஆயிரத்தை தாண்டி தினசரி கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 369 பேருக்கும், கோயம்புத்தூரில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்  தொடர்ந்து, 2வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது  குறிப்பிடத்தக்கது.

கொரோனா

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,77,570 ஆக அதிகரித்துள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 12,158 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,321 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web