உஷார்! 10 பேருக்கு மேல இருந்தாலே.. அந்த இடத்துல மாஸ்க் கட்டாயம்! அமைச்சர் பேட்டி!

 
மாஸ்க் போடாதவங்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

கொரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், மாநில அரசு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

தமிழகத்தில், 3 வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டனர். மேலும் தொற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது. 

மாஸ்க்

இந்நிலையில் சென்னை எழும்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக் சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் அரசின் விதிமுறையை பின்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். கொரோனா  தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதாகவும் 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமனியன் கேட்டுக்கொண்டார். 

மா.சுப்பிரமணியன் கொரோனா
மேலும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற பொறுப்பு தலைமைக்கு இருக்க வேண்டும் என்றும்  10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்    தெரிவித்தார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web