உஷார்! குரங்கு அம்மை நோயால் குழந்தைகளின் கண்பார்வை பறிபோகலாம்! எய்ம்ஸ் மருத்துவர் தகவல்!

 
குரங்கு அம்மை

குரங்கு அம்மை தொற்று நோயால் பாதிக்கப்படும் பொழுது, கொப்புளங்கள் கண் விழித் திரைக்கு அருகில் உருவானால், குழந்தைகளின் கண் பார்வை பறிபோகும் அளவுக்கு ஆபத்து இருக்கிறது என்று எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் கூறியுள்ளது பெரும் பரபரப்பும், பதற்றத்தையும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து உச்சத்தை தொட்டு வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கான முடிவை எட்டாத நிலையில் தற்போது குரங்கு அம்மை தொற்று சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை தோன்றி பரவியது. இதன் பார்வை இந்தியாவின் நேற்று முன்தினம் வரை படாமல் இருந்தது. இந்நிலையில் சவுதியில் இருந்து கேரளா வந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

குரங்கு காய்ச்சல்

உலகம் முழுவதும் 58 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் குறித்து சுகாதாரத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

குரங்கு அம்மையின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்குள் உடலின் பல பகுதிகளில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு பின்னர் அவை கொப்புளங்களாக மாறும்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர் பியூஷ் ரஞ்சன் கூறும் போது, ‘‘குரங்கு அம்மை தொற்று குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் பாதிப்பு குழந்தைகளுக்கு அதிகளவில் இருக்கும். மேலும் குரங்கு அம்மை தொற்றினால் ஏற்படும் கொப்புளங்கள் விழித்திரையில் உண்டாகும் பட்சத்தில் குழந்தைகளின் கண்பார்வை பறிபோகலாம்’’ என்று கூறியுள்ளார்.

குரங்கு காய்ச்சல்

இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. கொரோனா போன்ற தீவிர பாதிப்பை குரங்கு அம்மை ஏற்படுத்தாது என்று கூறப்படும் போதிலும், குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்திய பின்னரே அந்த தொற்று பிறருக்கு பரவும் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தைகளை குரங்கு அம்மை தொற்றில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web