முக்கடல் சங்கமத்தில் ஆனந்தக் குளியல்!! உற்சாக ஆட்டம் போடும் சுற்றுலாப்பயணிகள்!!

 
கன்னியாகுமரி

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு  செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி  வருவதால் கொரோனாவிற்கு முந்தைய முறைப்படி அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி

அந்த வகையில் கன்னியாகுமரியிலும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.அத்துடன்  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும்  வெங்கடாஜலபதி கோவிலிலும்  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடவும்  இன்று காலை 8 மணியில் இருந்தே படகுத்துறையில் நீண்ட வரிசை  காத்திருந்தது.  அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதிக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதால்  குமரி கடற்கரைப் பகுதியில் சுற்றுலாத்துறையினரும் கடலோர பாதுகாப்பு குழுவினரும்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web