தட்கல் முறையில் பத்திரப்பதிவு! அவசர பதிவுக்கு ரூ.5000 கட்டணம் அறிவிப்பு!

 
பத்திரப்பதிவு

பத்திரப் பதிவுத்துறையில் அவசரமாக முன்பதிவு செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அனைத்து விதமான பத்திரப்பதிவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 50 மாவட்ட பதிவாளர் அலுவலங்கள், அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் அலுவல் பணிகளை கண்காணித்து வருகின்றன.

சார்பதிவாளர் அலுவலகங்களில் முன்பு நேரடியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையாக இணைய வழியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசு செலுத்த வேண்டிய அனைத்து வித பதிவுக்கட்டணங்களும் பெறப்பட்டு வருகின்றன. மேலும் பொது மக்களிடம் இருந்து அதிகப்படியாக பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்றும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பீட்டின் பதி பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு
திருமணம் மற்றும் உடனடி பணத்தேவை உள்ளிட்டவற்றுக்காக குறுகிய காலத்தில் பத்திரப் பதிவை சிலர் மேற்கொள்ள விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு இவர்களின் வசதிக்காக ஆவண பதிவுக்காக முன்பதிவு டோக்கன்கள் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் செய்யப்படும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் பத்திரப்பதிவுத்துறை அறிவித்து இருந்தது.


இதன் முதல்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப்பதிவுகள் நடைபெறுவதை கணக்கில் கொண்டு 100 சார்பதிவாளர் அலுவகங்களை தேர்வு செய்து, பத்திரப்பதிவை அவசரமாக மேற்கொள்ள விரும்புவோருக்கு முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் புதிய முயற்சியை பத்திரப்பதிவுத்துறை கையாண்டுள்ளது. அதன்படி அவசர முன்பதிவுக்காக ரூ.5 ஆயிரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டும் பத்திரப்பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்திரப்பதிவு
தட்கல் முறையில் இனி ரூ.5 ஆயிரம் செலுத்தி அவசரமாக முன்பதிவு மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதன் மூலம் பெரும் பலன் கிடைக்கும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அரசுக்கு இந்த புதிய முற்சி மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web