போரிஸ் ஜான்சன் ராஜினாமா?! புதிய பிரதமராக, ரிஷி சுனக்? இந்தியாவுக்கு மிகப் பெரிய கெளரவம்!

 
போரிஸ் பெக்கர் டென்னிஸ் வீரர்

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன். இங்கு கடந்த சில மாதங்களாகவே அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி பிரிட்டன் நிதியமைச்சர் மற்றும் , சுகாதார அமைச்சர் இருவரும்  பதவி விலகினர்.

 இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்து வந்தது.இதனைத் தொடர்ந்து கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

போரிஸ் ஜான்சன்

இதனையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக இன்போஸிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனுக்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததால் புதிய பிரதமரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கூடி உள் ளார்கள்  புதிய பிரதமராக இந்திய வம்சாவளியினரான  ரிஷி சுனக் தேர்வு செய்யப் பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.அதாவது புதிய இங்கிலாந்து பிரதமர் ரேசில் ரிஷி சுனக் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது

ரிஷி சுனக் பிரிட்டன் இன்போஸிஸ்  மருமகன்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து வாழ் இந்தியரான ரிஷி சுனக் இந்தியாவின்  டாப் தொழில் அதிபர்களில் ஒருவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்து இருக்கிறார்.
.
ஒரு வேளை ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவிக்கு வந்தால் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் காலணித்துவத்தின் கீழ் காலணி நாடாக இருந்த இந்தியாவின் வம்சாவளியினர் ஒருவர் இங்கிலாந்து அரசாட்சியின் மையமான பிரதமர் பதவிக்கு வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய கௌரவமாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web