பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! 8 பேர் படுகாயம்!

 
பாம்பன் பாலம் பேருந்து விபத்து

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் பயணிகள் உயிர் தப்பினார்கள். இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருவது பாம்பன் பாலம். பரபரப்பான இந்த பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றும், தனியார் பேருந்தும் எதிரெதிரே கடந்து சென்று கொண்டிருந்த நிலையில்,  எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது அப்போது பாலத்தின் தடுப்பு சுவரில் தனியார் பஸ் மோதி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

பாம்பன் பாலம் பேருந்து விபத்து

பேருந்துகள் மோதிக் கொண்டதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக 2 பேருந்துகளிலும் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியிருந்தாலும் சிலர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பாம்பன் பாலம் பேருந்து விபத்து
அதன் பின்னர் விபத்தான 2 பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ததால் நீண்ட வரிசையில் நின்ற வாகன ஓட்டிகள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். பாம்பன் பாலத்தில் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web