பை.. பை. ட்விட்டர்.!! எலான் மஸ்க் அதிர்ச்சி முடிவு!!

 
எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

 

அதை தொடர்ந்து, அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். ட்விட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

Elon-Musk

இந்த நிலையில் ட்விட்டரில் 20 முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால்,  5 சதவீதத்திற்கு குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி ட்விட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

எலான் மஸ்க்

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் இன்று அதிரடியாக அறிவித்தார். போலி கணக்குகள் கேட்ட தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ட்விட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொடர உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web