சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
மாணவர்கள்

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவுசெய்தது. 

தேர்வு

அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2-வது பருவ பொதுத்தேர்வுகள் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு 10-ம் வகுப்பு தேர்வு மே 24-ம் தேதி வரையும் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு 2022 ஜூன் 15-ம் தேதி வரையும் நடைபெற்றது.

இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிட்டது. மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம். பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம். 

சிபிஎஸ்இ

இந்நிலையில் 12-ம் வகுப்பு மத்திய பாடப்பிரிவுக்கான (சிபிஎஸ்இ) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பின்னர் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 98.83% பேர் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூரு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web