சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 2வது வாரத்தில் வெளியகும்! யுஜிசி தகவல்!

 
EWS பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு மறு பரிசீலனை- மத்திய அரசு முடிவு..!!

சி.பி.எஸ். இ., பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 2வது வாரத்தில் வெளியாகும் என யுஜிசி தெரிவித்துள்ளது.  கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவுசெய்தது. அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2-வது பருவ பொதுத்தேர்வுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24-ம் தேதி வரையும், அதேபோல், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26 முதல் ஜுன் 15-ம் தேதியும் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு தேர்வை 21 லட்சத்து 16 ஆயிரத்து 209 பேரும், 12-ம் வகுப்பு தேர்வை 14 லட்சத்து 54 ஆயிரத்து 370 பேரும் எழுதியுள்ளனர்.

நீட் தேர்வு

உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதனால் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

இந்த நிலையில் தற்போது, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 2வது வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web