CUET நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!! மாணவர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!

 
CUTE

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விண்ணப்ப செயல்முறையை மீண்டும் தேதியை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே வாய்ப்பாக இந்த நுழைவுத் தேர்வு இருப்பதால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

cuet

இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்வதற்கும், விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் வரும் 24ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும் என்றும்,  இதற்கான, இணையதள முகவரி https://cuet.samarth.ac.in என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு  தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கியூட் தேர்வின் தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜுலை மாதம் 15, 16, மற்றும் 19, 20 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 4 தேதி முத 8ம் தேதி வரையும், மேலும் 10ம் தேதி ஆகிய  நாட்களிலும் கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள  மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது வரை, கியூட் தேர்வுக்காக 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

CUTE

மேலும், 43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என மொத்தம்  86 உயர்கல்வி நிறுவனங்கள் இந்த பொது நுழைவத் தேர்வின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தவுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இளநிலைப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web