CUET நுழைவுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!!

 
CUTE

இந்தியா முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு க்யூட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

CUTE

இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானிய குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்த பல்கலைக் கழகங்களில் ஆர்வமுள்ள மற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களும்  இணைந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

cuet

ஆங்கிலம், இந்தி, கனடா, உட்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட உளது. இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் 544 மையங்களில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பார்வையிட முயன்றதால் இணையதளத்தில் தாமதம் ஏற்பட்டதாக மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web