இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

 
அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூட இருக்கிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்  அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள்  குறித்து ஆலோசிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கூட்டம்
தற்போது தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்பு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை நிரந்தரமாக்க மசோதா தாக்கல் செய்யப்படும். மற்ற  புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன.  தாக்கல் செய்யப்பட உள்ள அனைத்து மசோதாக்கள் குறித்தும் அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது. 

19 துறை செயலர்களுடன் முதல்வரின் ஆலோசனை கூட்டம்!!
ஏற்கனவே செப்டம்பரில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு  அறிக்கை மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் ஆகியவை  குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web