இன்று தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம்! முக்கிய அறிவிப்புக்கள் வெளியாக வாய்ப்பு!!

 
ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது அமைச்சரவை கூட்டப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டாலின் கூட்டம்
அதிலும் குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம், புதிய சட்ட மசோதா, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விவாதம் நடத்த உள்ளார். கூட்டத்தின் முடிவில் பிரச்சினைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் கூட்டம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார் என்று அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web