அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் கட்டாயம்!! தமிழக அரசு !!

 
பள்ளி வாகனங்கள்

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது கட்டாயம் என, பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் தீக்சித், கடந்த மார்ச் மாதம் பள்ளி வேனில் சிக்கி பலியானார். வேனில் மறந்து வைத்துவிட்ட பொருளை மீண்டும் எடுக்க சென்ற போது, ஓட்டுநர் பார்க்கிங் செய்வதற்காக வேனை பின்னோக்கி நகர்த்திய நேரத்தில், மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார் கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறும்போது, ‘‘பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் அனைத்து வகையான பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அவை வாகனத்தின் முன்பதியில் ஒரு கேமராவும், பின் பகுதியில் ஒரு கேமராவும் என 2 கேமராக்களை பொருத்த வேண்டும். வாகனத்தை பின்னால் எடுக்கும் போது ஓட்டுனரின் பார்வைக்கு படும்படியான வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்கள்

மேலும் வாகனத்தின் 4 புறங்களிலும்  சிக்னல் கொடுப்பதற்கான சென்சார் பொருத்தப்பட வேண்டும். இதன் மூலம் வாகனம் ஏதோ ஒன்றின் மீது மோதும் நிலை ஏற்பட்டால், சென்சார் கருவி மூலம் சிக்னல் கிடைக்கும் வகையில் ஒலிக்கும் வகையில் அவை பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும் இந்த நடைமுறைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்’’ அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்கள்
 

 இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 2012ல் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்தை பின்னோக்கி நகர்த்தும் போது, பின்பகுதி முழுவதும் தெளிவாக தெரியும் அளவுக்கு, பேருந்தின் பின்பகுதியிலும் கேமரா பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தின் பின்பகுதியில் எச்சரிக்கை செய்யும் வகையில், சென்சார் பொருத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web