நீட்டிக்கப்பட்ட மாற்றுப்பணி ஆணை ரத்து!! அதிர்ச்சியில் விரிவுரையாளர்கள்!!

 
விரிவுரையாளர்கள்

தமிழகத்தில் கல்வித்துறையில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 2022-23 கல்வியாண்டிற்கு ஏப்ரல் 2 22 முதல் மார்ச் 2023 வரை 11 மாதங்களுக்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்ட பட்டது . 

பள்ளிக்கல்வித்துறை
அதன்பிறகு  கல்லூரி கல்வி இயக்குனரின் செயல்முறைகளின் படி நிர்வாக காரணங்களுக்காக மாற்றுப் பணியில் பணிபுரியலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும்  கௌரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணை தற்போது ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கௌரவ விரிவுரையாளர்களின் பணி ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

விரிவுரையாளர்

அதே போல் அரசுப் பள்ளிகளில் 2ம் நிலை , முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பள்ளி நிர்வாகக் குழு மூலம்  நியமிக்க தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதித்து நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தியுள்ளது. தற்போது தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்  திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை  சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில்  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து வந்த புகார்களால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்,  இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயில்பவர்களுக்கு  வாய்ப்பு வழங்குதல் , வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறிதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web