இனி தங்கம் வாங்கவே முடியாதோ!! உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் கவலை!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர், பங்கு சந்தை வீழ்ச்சி, பொருளாதாரச் சரிவு பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இன்று சென்னையில் 22 கேரட் ஒரு கிராம்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,835 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ரூ4,775 இருந்து வந்தது. அதேபோல, நேற்று 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 480 ரூபாய் அதிகரித்து  38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட் வருகிறது.

தங்கம்
அதே நேரத்தில் தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,234 ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.67 ஆக இருந்து வந்த நிலையில்  இன்று அது ரூ.67.50 ஆக  உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ67,500க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
மும்பையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.4,786க்கும் , பெங்களூருவில் ரூ.4,775 க்கும், ஹைதராபாத்தில் ரூ.4,775 ஆகவும், கேரளாவில் ரூ.4,780 க்கும், டெல்லியில் ரூ.4,786 க்கும், கொல்கத்தாவில் ரூ.4,775 க்கும், ஒசூரில்  ரூ.4,779 க்கும், பாண்டிச்சேரியில் ரூ.4,779 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web