ஒரே மேடையில் 16 அணிகளின் கேப்டன்கள்!! டி20 உலகக்கோப்பை அசத்தல் தொடக்கம்!!

 
16 நாடுகள் கேப்டன்கள்

நாளை அக்டோபர் 16ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை சர்வதேச 8வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.  நாளை தொடங்கும் இந்த போட்டிகள் நவம்பர் 13ம் தேதி வரை 7 நகரங்களில் நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.   முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடி அதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். 



இது தவிர இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்  அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்க உள்ள இந்த போட்டியில்  நாளை  கீலாங் ஸ்டேடியத்தில்  முதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் இலங்கையும்,  நமீபியாவும் மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறும். இதனையடுத்து நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் அணி விளையாடுகின்றன. 


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும்,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இந்த போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் இன்று  ஐசிசி சார்பில் 16 அணிகளின் கேப்டன்கள் ஒரே மேடையில் அணிவகுத்தனர்.  உலகக் கோப்பைக்கான பயிற்சிகள் குறித்து அந்தந்த அணியின் கேப்டன்கள்  பேசினர். அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.இந்த புகைப்படத்தை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் பெரும்  வைரலாக்கப்பட்டு  வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web