டிஜிபி சைலேந்திரபாபு மீது வழக்கு! ரூ.2000 அபராதத்துடன் தள்ளுபடி!

 
30-வது டி.ஜி.பி.யாக இன்று சைலேந்திரபாபு பதவி ஏற்றுக்கொண்டார்

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மீது உண்மையை மறைத்து காவலர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் என்பவர் 2005ம் ஆண்டு நியமனம் பெற்று பணியில் அமர்ந்தார். இதைத் தொடர்ந்து அருணாச்சலம் தான் 2003ம் ஆண்டே பணியில் சேர்ந்ததாக கூறி பணி மூப்பு கோரி தமிழக டிஜிபிக்கு மனு அளித்தார். இதைத் தொடர்ந்து தான் அளித்த மனு மீது விசாரிக்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார்.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசிலீக்கும் படி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்று அருணாச்சலம் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர் யோகேஷ் கண்ணதாசன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, ‘‘உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அருணாச்சலத்தின் மனுவை டிஜிபி பரிசீலித்தார். அதில், பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் விண்ணப்பிக்காமல், 11 ஆண்டுகள் கழித்து அருணாச்சலம் விண்ணப்பித்து இருக்கிறார். இதனால் அவரது மனுவை டிஜிபி நிராகரித்துள்ளார். இந்த உண்மையை மறைத்து அருணாச்சலம், தமிழக டிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தனது வாதத்தை முன் வைத்தார்.

சைலேந்திரபாபு

வாதத்தை கேட்ட நீதிபதி எம்.தண்டபாணி, தவறான மனுவை தாக்கல் செய்த இரண்டாம் நிலை காவலர் அருணாச்சலத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, தமிழக டிஜிபி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். தவறான மனுவை தாக்கல் செய்து தமிழக டிஜிபி மீது போடப்பட்ட பொய் வழக்கு குறித்து சட்ட வல்லுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சற்று நிம்மதி நிலவுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web