ஜூலை 28 முதல் கோமியத்துக்கு காசு!! அதிரடி அறிவிப்பு!!

 
கோமியம்

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன. தற்போது காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களில் ஒரு மாநிலமான சத்தீஸ்கரிலும் பாஜக ஆளும் மாநிலங்களின் வழியில் பசுக்களுக்காக தனி திட்டங்களை அரசு தொடங்கி வருகிறது.

சாணம்

கடந்த 2020-ம் ஆண்டு சத்தீஸ்கர் அரசு விவசாயிகளிடம் மாட்டுச் சாணத்தை பெற்று பணம் கொடுக்கும் ‘கோதன் நியாய் யோஜனா’ திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை ரூ.1.50-க்கு சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது. அந்த வழியில் தற்போது பசு கோமியத்துக்கு பணம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்திருந்தது.

கோமியம்

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு கோமியம் வாங்கும் திட்டம் ஜூலை 28-ம் தேதி முதல் தொடங்கும் என அம்மாநில் அரசு அறிவித்துள்ளது.கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாட்டுச் சாணத்தை வாங்கப்பட்டு வரும் நிலையில், ஹரேலி திருவிழா நாளான ஜூலை 28-ம் தேதி முதல் பசு கோமியம், குறைந்தபட்சம் லிட்டர் ஒன்று 4 ரூபாய்க்கு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web