காதலியின் தலையை துண்டாக வெட்டி ரத்தம் வடிய போலீசில் சரண்!! காதலன் பகீர் வாக்குமூலம்!!

 
போஜராஜா


முன்னாள் காதலியின் தலையை துண்டாக வெட்டிய காதலன் ரத்தம் சொட்ட சொட்ட அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விஜயநகர மாவட்டத்தின் குட்லிகி தாலுகாவில் உள்ள கண்ணபோரனையாவின் ஹட்டியில் உள்ள காவல் நிலையத்திற்கு போஜராஜா (25) என்ற இளைஞர் திடீரென்று நுழைந்துள்ளார். அவர் கையில் முன்னாள் காதலியின் துண்டிக்கப்பட்ட தடை இருந்துள்ளது. இதை பார்த்த காவல் துறையில் அதிர்ச்சியில் நடுங்கிப் போனார்கள். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட போஜராஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.

ரத்தம் சொட்ட சொட்ட... முன்னாள் காதலி தலையுடன் போலீசில் சரணடைந்த வாலிபர்!

போஜராஜா கையில் இருந்த துண்டிக்கப்பட்ட தலை நிர்மலா என்பவருக்கு சொந்தமானது. இவர் ஒசப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 3வது ஆண்டு படித்து வந்துள்ளார். போஜராஜாவும் நிர்மலாவும் கட்நத சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒரு சில காரணங்களால் இருவரின் காதலும் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து போஜராஜா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா, போஜராஜனை மிரட்ட தொடங்கியுள்ளார். காதலித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை போஜராஜாவின் மனைவியிடம் காட்டி விடுவதாகக் கூறி பிளாக்மெயில் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், நிர்மலா கல்லூரி விடுதியில் இருந்து சொந்து ஊருக்கு வந்ததை அறிந்தார். வீட்டில் தனியாக இருந்த நிர்மலாவை கொலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கையில் அரிவாளுடன் சென்றுள்ளார்.

கொலை

நிர்மலாவின் தலையை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி அதை எடுத்துக் கொண்டு கானஓசஹள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முன்னாள் காதலி பிளாக்மெயில் செய்து துன்புறுத்தியதால், அவரின் தலையை வெட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்த வாலிபரால் போலீஸ் நிலையமே மிரண்டு போய் நின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web