சென்னை மக்களே உஷார்!!! ஜெட் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா !!

 
கொரோனா வார்டு


சென்னையில் அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதனால் சுகாதாரத்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா தொற்று சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா தொற்று 16,103ஆக பதிவாகி உள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா

இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் தினசரி கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘‘’தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 34,82,775 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தல் தற்போது 14,504 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த ஒரு நாளில் 1,487 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா

தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,072 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோயம்புத்தூரில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மக்களை சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web