குவியல் குவியலாய் ஏரியில் கொட்டப்பட்ட கோழிகள்!! நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!!

 
கோழி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஆயிரக்கணக்கான கோழிகள் மர்மநோயால் தாக்கப்பட்டன. இவைகள் மொத்தமாக உயிரிழந்த நிலையில் அதனை இறந்து போன கோழிகளை ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் கொண்டு வந்து கொட்டிய சம்பவத்தால் நெமிலி பகுதியில் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் ஆன்லைன் மூலம் கோழி கறி, முட்டைகள் விற்பனைக்கு அனுமதி!
இறந்து போன எண்ணற்ற கோழிகள் மற்றும் கோழிக் கழிவுகளை நெமிலி அடுத்த கீழ் வெண்பாக்கம் ஏரியில் இருந்து திருமால்பூர் வழியாக அகரம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் மர்ம நபர்கள் கொட்டியுள்ளனர். இறந்த கோழிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவு பெருகியுள்ளதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதார அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் இறந்துபோன கோழிகளை அகற்றி அவற்றை கொட்டி சென்றவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோழி

குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள இறந்துபோன கோழிகளை பார்க்க அங்கு மக்கள் குவிந்து வருகின்றனர். கேரளாவில் பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் பலியாகி உள்ள நிலையில் இங்கு மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன நூற்றுக்கணக்கான கோழிகளை மர்ம நபர்கள் கால்வாயில் கொட்டி உள்ளனர். எனவே சுகாதாரத் துறையினர் உண்மை நிலையை கண்டறிந்து என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web