முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்! டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் ஆய்வு!

 
வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசடத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்தது. இதன்காரணமாக மேட்டூர் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து.

ஸ்டாலின்

இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அதிகபட்சமான இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 ஆயிரம் கி.மீ. தூர்வாரும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

ஸ்டாலின்

இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் திருச்சி வந்தடையும் முதல்வர், டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிடுகிறார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்யும் முதல்வர், நாளை திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web