முதல்வர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!! புதிய அறிவிப்புக்கள் வெளியாக வாய்ப்பு!!

 
19 துறை செயலர்களுடன் முதல்வரின் ஆலோசனை கூட்டம்!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தை அடுத்து பல்வேறு சாதனை விளக்கக் கூட்டங்களும், கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. அதன் அடுத்த படியாக திட்ட விளக்கம், தாமதம், செயல்பாடுகள் குறித்து துறை வாரியாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஸ்டாலின்

அந்த வகையில் இன்று பள்ளிகல்வித்துறை, சமூக நலத் துறை ,மின்சாரத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அறிவித்திருந்த  புதிய அறிவிப்புகள் குறித்து துறை அமைச்சர்களிடம் ஆலோசித்து வருகிறார்.  புதிய அறிவிப்புகள் திட்டங்களின்  தற்போதைய நிலை, செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டாலின்
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ,சமூகநலத் துறை, மின்சாரத் துறை  அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் . சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்திற்கு பிறகு பல அறிவிப்புக்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில்  நடப்பாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடு மற்றும்  மின் தடை ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய முடிவுகள்   குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவுகளை அறிவிக்கலாம் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web