இன்றும் தொடரும் 19 துறை செயலர்களுடன் முதல்வரின் ஆலோசனை கூட்டம்!!

 
19 துறை செயலர்களுடன் முதல்வரின் ஆலோசனை கூட்டம்!!

தமிழகத்தில் துறை வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை முதல்வர்  ஸ்டாலின்  நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று 19 துறை அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில் இன்று மீதமுள்ள 19 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில்  சாதனை விளக்கக் கூட்டங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் அரசு சார்பில் நிகழ்த்தப்பட்டன. தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை மேலும் மேம்படுத்த தமிழக முதல்வர் இன்று அரசு துறை செயலாளர்களுடன்  சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

secretariot
முதல் நாளான இன்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி  வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை , மற்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   ஓராண்டு ஆட்சி முடிந்த நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

stalin meeting
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளர் குமார் ஜெயந்த் உட்பட பல்வேறு துறை வாரியான அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று இடம் பெறாத மீதமுள்ள 19 துறைகளின் செயலாளர்களுடன் இன்று  இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்டங்கள்,  அறிவிப்புகளின் நிலை/ப்பாடு, செயல்பாடுகள், திட்ட நடவடிக்கைகள், தாமதமான திட்டங்கள்,  தாமதத்திற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web