BREAKING!! சினிமா, சீரியல்களில் குழந்தைகள் நடிக்க தடை!!

 
குழந்தைகள்

மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.தற்போதைய நடைமுறை வாழ்வில் அன்றாடம், சீரியல்களும், விளம்பரங்களும் நாளின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. இதில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் வயதானவர்கள் என பாரபட்சமின்றி நடித்து வருகின்றனர்.

குழந்தை

இதில் குழந்தைகளை நடிக்க வைப்பதை தடை செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி பெரிய திரை, சின்னத்திரை, விளம்பரங்கள் என எதிலும்  ‘3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது.


மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற்ற  பிறகே நடிக்க வைக்க வேண்டும். அந்த குழந்தைகளும் ஒரு நாளில்  6 மணி நேரம் மட்டுமே நடிக்க வேண்டும். குறிப்பாக இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை அவர்களை வேலை வாங்கக் கூடாது. மேலும்  கேலிக்கு ஆளாகும் பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைக்க அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், 3 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web