செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து சீனா விலகல்!!
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் தமிழக அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவதால் ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் ஜூன் 19ம் தேதி இந்திராகாந்தி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வர உள்ளது. ஜூலை 27ம் தேதி ஒலிம்பியாட் ஜோதி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாடுகளுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது சீனா தானாகவே முன்வந்து கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
