6.5 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு!! அமைச்சர் அதிர்ச்சி தகவல்!! பீதியில் பொதுமக்கள்!!!

 
நிலக்கரி

கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருவதன் எதிரொலியாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவை  பொறுத்தவரை நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்திருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறையத் தொடங்கியதால் மின்சார உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது.

நிலக்கரி

இதனால் தமிழகமே இருளில் மூழ்கும் அபாயம் உருவாகி வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன்படி நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது ,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்உற்பத்தி நிலையங்களின் போதுமான அளவுக்கு நிலக்கரி உள்ளது – நிலக்கரித்துறை அமைச்சகம் விளக்கம்
“தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு பெறும் எனவும் அதற்கான  பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார். முதல்வரின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வாரியத்தின் மூலமாக இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு அவை இரு நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்திற்கு தட்டுப்பாடின்றி  நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. கோடைகாலமாக இருப்பதால் மின் தேவை அதிகரித்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் இனி வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web