ரேஷனில் தேங்காய் எண்ணெய்?! விவசாயிகள் மகிழ்ச்சி!!

 
ரேஷனில் தேங்காய்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இதன் தொடர்ச்சியாக ஜூன்13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. இது குறித்து தமிழக அரசுடன் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையின் போது 1 வார காலத்திற்குள் தீர்வுகள் காணப்படும்.

இனி ரேஷன் கடைகளில் புதிய விற்பனை பொருட்கள்! முதல்வர் அதிரடி!

அத்துடன் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை உத்தரவாதம் அளித்துள்ளது. இதன் அடிப்படையில்  காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து கூட்டுறவுத்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப் படி உயர்வு குறித்து அரசு  இன்னும் 1 வாரதிற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரேஷன் விரல் பதிவு கைரேகை
இதனால் ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் கவலை ஏதுமின்றி பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் மேலும் இதை தொடர வேண்டாம். அத்துடன் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது மக்களுக்கு ஆறுதலையும், அரசுக்கு நிம்மதியையும் அளித்துள்ளாதாக தெரிவித்துள்ளார்

நியாய விலைக் கடைகளில் மீண்டும் தேங்காய் எண்ணையை வழங்கினால் அது தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அரசு தென்னை நலவாரியத்தை மீண்டும் அமைக்க வேண்டும்.காங்கேயம் பகுதியில் தென்னைக்கு நிரந்தர பொருட்காட்சி மற்றும் காட்சிப்படுத்தல் கட்டிடம் அமைக்க வேண்டும். மேலும் தேங்காயின் மூலம் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்க காங்கேயம் பகுதியில் தென்னை தொழிற்சாலை பூங்கா அமைக்க அரசு முன்வரவேண்டும். 


கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம், சுல்தான்பேட்டை, பேரூா், தொண்டாமுத்தூா், மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளிலும் திருப்பூா் மாவட்டம், காங்கேயம், உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும்பாலான  விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவை, திருப்பூா் மாவட்டங்களில் மட்டும் சுமாா் 2 லட்சம் ஹெக்டோ் பரப்பளவுக்கு மேலாக தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது என முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் மூலம்கோரிக்கை விடுத்துள்ளார். .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web