கல்லூரி மாணவிகள் போராட்டம்!! ஆவடியில் பரபரப்பு!!

 
கல்லூரி மாணவிகள்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி  பருத்திப்பட்டு அருகே தனியார் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2000 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்திற்கு அருகேதனியாருக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் காலிமனை  அமைந்துள்ளது. இங்கு  தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர்  3 அடி உயரத்துக்கு மழைநீருடன்சேர்ந்து தொடர்ந்து  பல மாதங்களாக காலிமனையில தேங்கி உள்ளது.

போராட்டம்

அந்த கழிவுநீர் கல்லூரி சுற்றுச்சுவரில் கசிந்து  கல்லூரி விளையாட்டு திடலிலும் உள்ளது. பல மாதங்கள் தேங்கி இருந்த தண்ணீர் ஆனதால்  கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கல்லூரியில் வகுப்புக்கள் நடக்கும் போது  மாணவிகள் வகுப்பறை கதவை திறந்து வைக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீரை அகற்ற கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில்  ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை . இந்த  துர்நாற்றத்தால் சில கல்லூரி மாணவிகள் வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்த போது அக்டோபர் 14ம் தேதி வகுப்பறையிலேயே  சிலர் மயங்கி விழுந்தனர். சில  எடுத்தனர்.

போலீஸ்

இது தொடரவே பிற்பகலுக்கு பின்னர் மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் நேற்று அக்டோபர் 15ம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவிகள், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி நுழைவு வாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடக் கோரி ஆவடி சரக காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன்  15 நாட்களில் கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web