வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ187 விலை குறைப்பு!

 
வணிக சிலிண்டர்

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைந்துள்ளது வணிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 1) சிலிண்டரின் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்விலை 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்
இந்நிலையில் புதிய விலை மாற்றத்தின் படி, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2021 ஆக உள்ளது. அதே போல, மும்பையில் சிலிண்டரின் விலை ரூ.2,116.5லிருந்து ரூ.2,307 ஆகக் குறைந்துள்ளது. கொல்கத்தாவில் சிலிண்டர் விலை ரூ.2,140 ஆக இருக்கிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதால், பேக்கரி,தேநீர் கடை உட்பட நடுத்தர தொழில் முனைவோர் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். 

வணிக சிலிண்டர்
வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், மாதத்தின் மத்தியில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து விற்பனை செய்யப்படுவது சிறு, குறு வியாபாரிகளிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மானியமாக 200 ரூபாய் கிடைக்கும். இதன்படிப் பார்த்தால் அவர்கள் சிலிண்டருக்கு 803 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். கடந்த இரு வருடங்களாகவே கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து 2020 ஜூன் மாதத்தில் இருந்து நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web