2வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்!! ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலும் பாதிப்பு!!

 
கண்டெய்னர்

சென்னையில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் சரக்குகள் அனைத்தும் கண்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. நேற்று முதல் துறைமுகத்தில் பணிபுரியும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் , வாடகையை உயர்த்தி தரக்கோரி வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெய்னர் லாரிகள் 2-வது நாளாக ஸ்டிரைக்

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்குகளை கொண்டு செல்லும் பணியில், 5000க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. 2014 முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை இதுவரை அப்படியே தான் வழங்கப்பட்டு வருகிறது. உயர்த்தி தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை வலியுறுத்தி  கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கண்டெய்னர்
 2014ல்  டீசல் விலை 48 ரூபாயாக இருந்தாகவும், தற்போது 100 ரூபாயைக் கடந்த பிறகும் அதே கூலி பற்றாக்குறையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.மேலும், இன்சூரன்ஸ், எப்.சி., உதிரி பாகங்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே  வாடகையை உயர்த்தி தர வேண்டும் எனக் கூறியுள்ளனர். இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.  கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  விரைவில் ஆவன செய்யும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web