அக்டோபர் 28 முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம்!! பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

 
பால்

தமிழகத்தில் அரசு சார்பில் ஆவின் பால் உற்பத்தி செய்து மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்டது . அது முதல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தொடர்ந்து 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

பால்

இது குறித்து சேலத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி  அக்டோபர்  26-ம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அக்டோபர் 28-ம் தேதி முதல் தமிழகம்முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 17-ம் தேதி முதல் 20-ந்தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆவின் பால் லாரி

மேலும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும் அதேபோல் எருமைப்பால் ஒரு லிட்டர் 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பால் நிறுத்த போராட்டம் நடைபெற்றால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டம் பால் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web