தொடரும் மழை பாதிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

 
ஸ்டாலின் மோடி

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் பெரும்பாலும் மாலை நேரங்களில் தொடங்கும் மழையானது விடியற்காலை வரையில் பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இடி மின்னல் மழை

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, சென்னையில் பெய்த மழையால் சில மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி, பயணிகள் பெரும் அவதிக்குள்ளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு, இனி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மழை

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட உள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கையாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web