சமையல் சிலிண்டர் விலை ரூ50 உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
சிலிண்டர் மானியம்

வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் அடிப்படையில் சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலைகளை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தொடர்ந்து சில மாதங்களாகவே சிலிண்டர் விலைகள் வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் நடுத்தர ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சிலிண்டர்

அந்த வகையில்  ஜூன் 1 ம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிலிண்டர் நிர்மலா சீதாராமன்

உயர்த்தப்பட்ட விலையின் படி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web