சமையல் எண்ணெய் விலை ரூ 15 குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
சமையல் எண்ணெய்

இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகள் முதல்  சமையல் எண்ணெய் வரை விலை அதிகரித்து வருகிறது.

சமையல் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை இந்தியாவிற்கு தேவையான சமையல் எண்ணெயில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் சமையல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து, சர்வதேச அளவில் விலை குறைந்தது. மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியது.

oil

இதைத் தொடர்ந்து இந்தியாவில் சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பாமாயில் ஆகிய எண்ணெய்களின் சில்லறை விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் 15 வரை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதால், விலையை மேலும் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது.

முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்கள், சங்கங்களுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 6-ம் தேதி நடந்த இந்த கூட்டத்தில் விலை குறைப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களுடனும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு எண்ணெய் வாங்கும் மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் எண்ணெய்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வலியுறுத்தினோம். இதனால் சமையல் எண்ணெய் விலையை ரூ.15 வரை குறைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.15 குறைப்பதாக உறுதியளித்தனர் என்று தெரிவித்தார்.

மேலும், ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெயை நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web