கொரோனா, ஒமிக்ரான் , தக்காளி காய்ச்சல், குரங்கு அம்மை வரிசையில் நேரோ வைரஸ்!! மக்களே உஷார்!!

 
ராதாகிருஷ்ணன் தக்காளி வைரஸ்

உலகம் முழுவதும்  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பூசிகள் மூலம் பல்வேறு நாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது கடந்த சில வாரங்களாக நோரோ வைரஸ் அறிகுறிகளாக தொற்று, வாந்தி, பேதி இவை அதிகரித்து வருகின்றன. இந்த வைரசால் குடல் எரிச்சல், சத்துணவுக் குறைபாடு இவைகளும் ஏற்படலாம். 

தக்காளிக் காய்ச்சல்
ஒவ்வொரு ஆண்டும் 68.5 கோடி பேர் நோரோ வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 20 கோடி பேர் குழந்தைகள். இந்தியாவில் கேரளாவில் முதன்முதலாக நோரோவைரஸ் ஆலப்புழா மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் பரவி தற்போது  950 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேரோ வைரஸ்
மேலும் தீவிரமாக பரவி வரும் நிலையில் நேரோ வைரஸ் தானாகவே கட்டுக்குள் வரக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 92 சதவீதம் பேருக்கு  வெளிநோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டதுமே குணமாகி விட்டனர் என்பது ஆறுதலான விஷயம். கேரளா ஆலப்புழாவில் இத்தொற்று முதலில் பரவியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அந்த முடிவுகளின் படி மாசடைந்த குடிநீரால் தான் இத்தொற்று பரவியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே குடிக்கும் படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web