தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!! முதல்வர் அவசர ஆலோசனை!!

 
ஸ்டாலின் கூட்டம்

தமிழகத்தில் கொரோனா முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள்திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனாலும் தற்போது கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவது சுகாதாரத்துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்

நேற்று தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 219 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இந்த தகவல்கள் தமிழக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு மருத்துவத்துறை நிபுணர்கள், செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

19 துறை செயலர்களுடன் முதல்வரின் ஆலோசனை கூட்டம்!!

இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை கடுமையாக்குவது எப்படி என்பது குறித்தும், தேவையான மருத்துவ வசதிகள் தயாராக உள்ளனவா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் இதுபோன்றதொரு அசவுகர்யமான சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web